11 வயது மூத்த நடிகருடன் இளம் நடிகை ஸ்ரீலீலா காதல்? உறுதி செய்த தாய்

Indian Actress Actress Sreeleela
By Kathick Mar 13, 2025 11:30 AM GMT
Report

இளம் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா பாலிவுட் ஹீரோ கார்த்திக் ஆர்யன் என்பவருடன் காதலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலீலா தற்போது பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் ஹீரோவான கார்த்திக் ஆய்ரனுடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது.

11 வயது மூத்த நடிகருடன் இளம் நடிகை ஸ்ரீலீலா காதல்? உறுதி செய்த தாய் | Sreeleela Dating With Karthik Aryan

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் இருப்பவர் கார்த்திக் ஆர்யன். இவர் தன்னை சிங்கிள் என சொல்லிக்கொண்டாலும், பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட கார்த்திக் ஆர்யனின் தாய் மாலா தனக்கு வரப்போகும் மருமகள் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார். இதில் "குடும்பத்தின் தேவை என்னவென்றால், அவள் ஒரு நல்ல டாக்டராக இருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

11 வயது மூத்த நடிகருடன் இளம் நடிகை ஸ்ரீலீலா காதல்? உறுதி செய்த தாய் | Sreeleela Dating With Karthik Aryan

இதன்மூலம் அவர் கார்த்திக் ஆர்யன் - ஸ்ரீலீலா உறவை உறுதி செய்துள்ளார் என பாலிவுட் ஊடகங்கள் கூறி வருகிறார்கள். ஏனென்றால் நடிகை ஸ்ரீலீலா எம்பிபிஎஸ் முடித்துள்ளார். மேலும், நடிகை ஸ்ரீலீலா சமீபத்தில் கார்த்திக் ஆர்யனின் வீட்டில் நடந்த ஒரு குடும்ப நிகழ்வில் கலந்துகொண்டாராம்.

11 வயது மூத்த நடிகருடன் இளம் நடிகை ஸ்ரீலீலா காதல்? உறுதி செய்த தாய் | Sreeleela Dating With Karthik Aryan

அதில் மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். அதில் ஸ்ரீலீலாவும் கலந்துகொண்டது இவர்களின் உறவை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. கார்த்திக் ஆர்யனை விட 11 வயது இளையவர் நடிகை ஸ்ரீலீலா என்பது குறிப்பிடத்தக்கது.