மேடையில் இதுதான் நடந்தது..நடிகரை முறைத்த விவகாரம்!! ஸ்ரீலீலா விளக்கம்..
உஸ்தாத் பகத் சிங்
இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் தான் உஸ்தாத் பகத் சிங். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை ஸ்ரீலீலா மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ளனர்.

இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் ஹைதராபத்தில் நடந்தபோது பவன் கல்யாண் பேசினார். அவர் பேசும்போது ஸ்ரீலீலா தனக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நடிகர் மகேஷை பார்த்து முறைத்தபடி ஒரு லுக் விட்டார். ஸ்ரீலீலாவின் அந்த ரியாக்ஷன் சோசியல் மீடியாக்களில் வீடியோவாக வைரலாகி பேசுபொருளானது.
மகேஷ்
இதுகுறித்து நடிகர் மகேஷ் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை பகிர்ந்து, இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன் நடிகை ஸ்ரீலீலா அவரது செல்போனை என்னிடம் கொடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். பின் மேடையில் நின்று கொண்டிருந்த என்னிடம் இருந்த ஸ்ரீலீலாவின் மொபைல் போன் ஸ்கீர்னை பார்த்தார். அதற்கு நான் சிரித்தேன், அவ்வளவு தான் நடந்தது.
ஆனால் சோசியல் மீடியாக்களில் பலரும் தங்களுக்கு தோன்றிய கருத்துக்களை பேசி வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீலீலா
மேலும், இதுகுறித்து நடிகை ஸ்ரீலீலாவிடம் பத்திரிக்கையாளர்கள் என்ன நடந்தது என்று கேட்டுள்ளனர். அதற்கு ஸ்ரீலீலா, எதுவும் நடக்கவில்லை, சவுண்ட் வந்ததால் திரும்பினேன், அதுவும் என் போன் அவரிடம் இருந்தது, அதனால் திரும்பி பார்த்தேன்.

அங்கு எதுவும் நடக்கவில்லை, இணையத்தில் அந்த வீடியோ தவறான முறையில் யூகிக்கப்பட்டுள்ளது. இதை மோசமாக சித்தரித்ததை பார்த்து எனக்கு கஷ்டமாக இருந்தது, எதுவும் அங்கு நடக்கவில்லை என்று ஸ்ரீலீலா கூறியுள்ளார்.
అలా ఏమి లేదు.. ఆరోజు ఏం జరిగిందంటే?#Sreeleela about her Viral Clip with #MaheshAchanta ! pic.twitter.com/tk8817WJtG
— Rajesh Manne (@rajeshmanne1) March 18, 2026