கைக்கூப்பி கேட்கிறேன்..AI புகைப்படங்களால் வேதனையில் பராசக்தி பட நடிகை ஸ்ரீலீலா..

Gossip Today Actress Sreeleela Parasakthi
By Edward Dec 17, 2025 03:45 PM GMT
Report

நடிகை ஸ்ரீலீலா

தெலுங்கு சினிமாவில் குட்டி நட்சத்திரமாக Chitrangada என்ற படத்தில் நடித்து பின் கிஸ், Bharaate என்ற கன்னட படங்களில் ஹீரோயினாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை ஸ்ரீலீலா. இதனையடுத்து பல படங்களில் நடித்து வரும் ஸ்ரீலீலா, குண்டூர் காரம், ஜூனியர், மாஸ் ஜதாரா போன்ற் படங்களில் நடித்து பிரபலமானார்.

கைக்கூப்பி கேட்கிறேன்..AI புகைப்படங்களால் வேதனையில் பராசக்தி பட நடிகை ஸ்ரீலீலா.. | Sreeleela Pens Emotional Note On Ai Pics Videos

புஷ்பா 2 படத்தில் கிஸ்க் என்ற பாடலுக்கு ஆட்டம்போட்டு பல கோடி சம்பளமாக பெற்று அசத்தினார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்தி படத்தில் கமிட்டாகி நடித்து வரும் ஸ்ரீலீலா, தற்போது AI புகைப்படங்களுக்கு எதிராக குரல் எழுப்பி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

கைக்கூப்பி கேட்கிறேன்

அதில், AI-ஆல் உருவாக்கப்பட்ட அபத்தமான விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்று ஓவ்வொரு சோசியல் மீடியா பயனர்களையும் கைக்கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

கைக்கூப்பி கேட்கிறேன்..AI புகைப்படங்களால் வேதனையில் பராசக்தி பட நடிகை ஸ்ரீலீலா.. | Sreeleela Pens Emotional Note On Ai Pics Videos

தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதற்கான வித்தியாசம் இது. என்னை பொறுத்தவரை தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வாழ்க்கையை எளிமையாக மாற்ற வேண்டுமே தவிர, சிக்கலாக்க கூடாது. கலையை வேலையாக தேர்ந்தெடுத்தாலும், அதிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் ஒருவருக்கு மகள், பேத்தி, தங்கை, தோழி, சக பணியாளராவார்.

நாங்கள் பாதுகாப்பான சூழலில் இருக்கிறோம் என்று நம்பிக்கையுடன் மகிழ்ச்சியை பரப்பும் ஒரு துறையில் இருக்க விரும்புகிறோம். இணையத்தில் நடக்கும் பல விஷயங்களை என்னுடைய வேலை காரணமாக என்னால் கவனிக்க முடியவில்லை. அதை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்த நலம் விரும்பிகளுக்கு நன்றி.

நான் எல்லா விஷயங்களையும் சந்தேகத்துடன் அணுகுவேன், ஆனால், இந்த விஷயம் என்னை மிகவும் தொந்தரவு செய்ததுடன் வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையை கடந்து வந்தவர்களுக்காகவும் இதை பதிவு செய்கிறேன்.

கருணையும், கண்ணியமும் கொண்ட என் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுகிறேன். இனிமேல் அதிகாரிகள் இந்த விஷயத்தை கவனித்துக்கொள்வார்கள் என்று கோபத்தில் கொந்தளித்துள்ளார் நடிகை ஸ்ரீலீலா.

Gallery