ட்ரோல்களால் மனமுடைந்து போன ஸ்ரீலீலா.. கண்ணீர் விட்டு அழுத நடிகை
Actress
Sreeleela
By Kathick
இந்திய சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் நடிப்பில் அடுத்ததாக பாலிவுட்டில் ஒரு புதிய படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஸ்ரீலீலா, தன்னைப் பற்றி வெளியாகும் கடுமையான ட்ரோல்களால் மனமுடைந்து பலமுறை கண்ணீர் விட்டு அழுததாக கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், ஆரம்பத்தில் எதிர்மறை விமர்சனங்களால் காயமடைந்தாலும், தற்போது எதை ஏற்க வேண்டும், எதை புறக்கணிக்க வேண்டும் என்கிற பக்குவம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ஸ்ரீலீலா, தனது வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.