என் விஸ்வாசம் அம்பானிக்கு!! SRH - MI.. இஷான் கிஷனை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..
SRH - MI
ஐபிஎல் 2025 தொடரில் நேற்றும் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. முதல் ஆடிய ஹைதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக பொறுமையாக ஆடிய கிளாசனால் 141 இலக்கை நிர்ணயம் செய்தனர்.
இதனை தொடர்ந்து ஆடிய மும்பை அணியினர் 15 ஓவர்களிலேயே 141 ரன்கள் அடித்து வெற்றியடைந்தனர். இந்த வெற்றி மூலம் ஆர்சிபி அணியை கீழே தள்ளி மும்பை இந்தியன்ஸ் அணி 3வது இடத்திற்கு முன்னேறியது.
இஷான் கிஷன்
இந்நிலையில் இப்போட்டியின் போது முதலில் ஆடிய ஹைதராபாத் அணி வீரர் இஷான் கிஷன், போல்ட் வீடிய 2வது ஓவரில் பின் பக்கமாக ஆட முற்பட்டார். பின் விக்கெட் கீப்பர் ரிக்கல்டன் எளிதாக பந்தை பிடித்தார். ஆனால் நடுவர் ஒய்வு கொடுப்பதற்காக கைகளை தூக்கிபோது திடீரென இஷான் கிஷன் பெவிலியனை நோக்கி நடக்க தொடங்கியதை பார்த்த அம்பயர், அவுட் என்று அறிவித்தார். கிஷன் நடக்க ஆரம்பித்ததை பார்த்த ஹர்திக், தீபக் ஆகியோ அவுட் அப்பீல் செய்தனர்.
இதனால் அம்பயரும் அவுட் கொடுக்க ஹைதராபாத் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதன்பின் டிஆர்எஸில் ஸ்னிக்கோமீட்டரில் சோதனை செய்தபோது இஷான் கிஷன் பேட்டில் பந்து படவில்லை. பேட்டில் பட்டதாக நினைத்து இஷான் கிஷன் நடந்து சென்றதை பலரும் விமர்சித்தும் மும்பை இந்தியன்ஸ் அணியினர் இதிலும் மோசடி செய்ததாக கலாய்த்து வருகிறார்கள். மேலும் இஷான் கிஷனின் விஸ்வாசம் எப்போதும் அம்பானிக்கு தான் என்று நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்.




