கணவரின் தம்பியோடு 14 படங்களில் ரொமான்ஸ்.. அந்த பிரபல நடிகை யார் பாருங்க
14 படங்களில் ரொமான்ஸ்
பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியது தான் சினிமா. இங்கு ஒரு படத்தில் மகளாக நடித்த நடிகையுடன் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்கும் பல நடிகர்கள் சினிமாவில் உள்ளனர்.
அந்த வகையில் கணவரின் தம்பியோடு 14 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை குறித்து உங்களுக்கு தெரியுமா? ஆம், அந்த நடிகை வேறுயாருமில்லை ஸ்ரீதேவி தான்.
இந்திய சினிமா பெருமைப்படும் அளவிற்கு அழகு, நடிப்பு, பேச்சு, நடனம் என எல்லா விஷயங்கள் மூலமும் சினிமாவில் கலக்கி மக்களால் மறக்கவே முடியாத ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருந்த இவர் இப்போது இல்லை ஆனால் அவரது மகள்கள் சினிமாவில் கலக்க தொடங்கிவிட்டார்கள்.
தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி என 2 மகள்கள் உள்ளனர்.
இவர் தனது கணவரின் தம்பியான அனில் கபூர் உடன் ஜோடி சேர்ந்து மொத்தம் 14 படங்களில் நடித்துள்ளார். அதில் 10 படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் ஹிட் அடித்துள்ளன. இதில், பெரும்பாலான படங்களை போனி கபூர் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.