சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 5 முடிவு..இலங்கை பாடகிக்கு நேர்ந்த கதியால் ரசிகர்கள் வருத்தம்..

Zee Tamil Saregamapa Lil Champs Saregamapa Seniors Season 5
By Jai Jun 09, 2026 06:00 AM GMT
Report

சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 5

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. இந்நிகழ்ச்சியின் லிட்டில் சாம்ப்ஸ் 5ன் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி ஞாயிறு 7ஆம் தேதி ஒளிப்பரப்பானது. அபிஷேகா, சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 5ன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 5 முடிவு..இலங்கை பாடகிக்கு நேர்ந்த கதியால் ரசிகர்கள் வருத்தம்.. | Sri Lankan Singer Varja Misses Top 3 Little Champs

அரங்கமே கரகோஷத்தில் அதிர, மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க மேடையில் நின்ற அபிஷேகாவுக்கு ரூ. 1கோடி மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டது. சுமன் ராஜ், தன்வி, வர்ஜா, விஷ்ணுவர்தன், அபிஷேகா மற்றும் அக்சத் நிரூபம் என 6 போட்டியாளர்கள் இறுதி போட்டியில் போட்டியிட்டனர்.

நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், சைந்தவி, ஸ்வேதா மோகன், எஸ் பிபி சரண் ஆகியோர் பங்கேற்று போட்டியாளர்களை மதிப்பீடு செய்தனர். நடுவர்களின் மதிப்பெண்கள் மற்றும் மக்களின் வாக்குகள் அடிப்படையில் அபிஷேகா சீசன் 5ன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அதன்பின் முதல் ரன்னர் அப் இடத்தினை விஷ்ணுவர்தன் பிடித்தார். 3வது இடத்தை தன்வி பெற்றார்.

சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 5 முடிவு..இலங்கை பாடகிக்கு நேர்ந்த கதியால் ரசிகர்கள் வருத்தம்.. | Sri Lankan Singer Varja Misses Top 3 Little Champs

இலங்கையை சேர்ந்த வர்ஜா

இந்நிலையில், பலரும் இலங்கையை சேர்ந்த வர்ஜா தான் டைட்டில் வின்னராக வேண்டியது என்று பேச்சுக்கள் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. திருகோணமலை மாவட்டம் முகத்துவாரம் பகுதியை சேர்ந்த வர்ஜா, ஆடிஷன் சுற்றிலேயே கே பி சுந்தராம்பாள் பாடிய பழம் நீயப்பா என்ற பாடலை சிறப்பாக பாடி அசத்தினார். அதனையடுத்த சுற்றுக்களையும் சிறப்பாக பாடி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் வர்ஜா.

சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 5 முடிவு..இலங்கை பாடகிக்கு நேர்ந்த கதியால் ரசிகர்கள் வருத்தம்.. | Sri Lankan Singer Varja Misses Top 3 Little Champs

அதிலும் கிராண்ட் பைனலுக்கு முன்பாக சோசியல் மீடியாக்களில் நடைபெற்ற கருத்துக் கணிப்புகளில் வர்ஜா, டாப் 3 இடத்தினை பிடிப்பார் என்று நம்பியிருந்தனர். ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் அளித்தது. இலங்கையில் இருந்து வந்து இவ்வளவு தூரம் வந்ததே பெரிய சாதனை", "குரலால் ரசிகர்களை ஜெயிச்சிட்டார் என்று பலரும் வர்ஜாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.