கணவருடன் விவாகரத்து விவகாரம்! சமந்தாவை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கூறிய சர்ச்சை நடிகை.. வீடியோ வெளியீடு..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை சமந்தா. 2017ல் திருமணம் செய்து கொண்ட சமந்தா தற்போது வரை படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியாக பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சர்ச்சை காட்சிகளில் நடித்தது நாக சைதன்யாவின் குடும்பத்தில் சில சலசலப்பு ஏற்பட்டதால் சமுகவலைத்தளத்தில் இருந்து நாகர்ஜூனா குடும்ப பெயரான அக்கினேனியை நீக்கி எஸ் என்று பதிவிட்டார்.
இதை வைத்து இருவருக்கு விவாகரத்தா என்ற வதந்தி செய்திகள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து மெளனமாக இருந்து வந்த சமந்தா இதுபோன்ற வதந்திகள் 100க்கும் மேல் வந்திருக்கிறது என்று கூறினார். நாக சைதன்யாவும் சினிமாவை தன் தனிப்பட்ட வாழ்க்கைக்கு கொண்டு வரமாட்டேன் இதை என் பெற்றோர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்றும் இன்று ஒரு செய்தி நாளை மற்றொரு செய்தி வந்ததும் அதை மறந்துவிடுவார்கள் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அப்படி இருந்து அவர்கள் நடந்து கொள்ளும் சில விஷயங்கள் இன்னும் நீண்டு கொண்டே சென்றுள்ளது. இந்நிலையில் பிரபல சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி சமந்தா நாக சைதன்யா விவாகரத்து பற்றி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சமந்தா இது பற்றி அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தும் ஹாலிவுட் நடிகை என்ற எண்ணத்தை விட்டுவிட்டு பொறாமை அதெல்லாம் இல்லாமல் நாக சைதன்யாவுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், இருவரும் விவாகரத்து முடிவு எடுத்திருந்தால் பேசி நல்ல விதமான நடந்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரையாகவும் வேண்டுகோளாகவும் எடுத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். சமந்தா நாக சைதன்யா பிரிய எனக்கு ஆசையில்லை. என்னை ரசிகர்கள் திட்ட வேண்டாம் என்றும் கூறி பேசியுள்ளார்.