என் டாப்பை எப்போது கழட்டினேனோ அப்பவே எல்லாம் போச்சு!! 25 பேரிடம் ஏமாந்த சர்ச்சை நடிகை..
தெலுங்கு சினிமாவில் சர்ச்சை நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. சில வருடங்களுக்கு முன் தன்னை பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தருவதாக கூறி சீரழித்து ஏமாற்றினார்கள் என்று ஊடகங்கள் முன் புகாரளித்தார். புகாரளித்தது மட்டுமில்லாமல் ஆடையை கழட்டி பொது இடத்தில் போராடினார்.
இதில் தமிழ் பிரபலங்கள் ஏ ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், விஷால், நானி உள்ளிட்ட பலர் இந்த லிஸ்ட்டில் இருந்துள்ளதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார். இதன்மூலம் கோலிவுட்டில் பிரபலமான நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபத்தில் பேட்டியொன்றில் சர்ச்சையாக பேசியுள்ளார்.
அதில் நான் ஊடகங்களுக்கு முன் ஆடையை கழட்டியது என் அம்மா, அப்பா, தம்பிக்கு எப்படி இருந்திருக்கும். நான் என் அம்மா முன்பு கூட ஆடையை மாற்றமாட்டேன். அப்போது எனக்கு கஷ்டமாக இருந்தது என்று கூறி கண்ணீர்விட்டார் ஸ்ரீ ரெட்டி.
மேலும், இந்த அவமான வேறு யாருக்கும் வரக்கூடாது. நான் டாப்பை கழட்டினேனோ அன்னைக்கே என் மானம் எல்லாமே போச்சு.
25 பேர் என்னை ஏமாற்றி சீரழித்தார் என்று கூறியுள்ளார். படத்திற்கு தேவை என்றால் மட்டுமே கவர்ச்சி காட்டுங்கள், போட்டோஷூட்டில் அதீத ஆர்வம் காட்ட வேண்டாம் என்று ஒரு நடிகையாக சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.