என்னிடம் நிறைய செருப்புகள் இருக்கு.. உங்களுக்கு வேணுமா!! ஸ்ரீரெட்டி பதிலடி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷால் தன்னுடைய 48-வது பிறந்த நாளை இன்று ஆகஸ்ட் 29 அன்று கொண்டாடியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக ஆதரவற்ற முதியவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடி வரும் விஷால் இந்த ஆண்டும் காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார்.

ஸ்ரீரெட்டி பதிலடி
அதை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த விஷால், உங்கள் மீதே நடிகை ஸ்ரீரெட்டி புகார் அளித்திருக்கிறார்களே என்று கேட்டுள்ளார். ஸ்ரீரெட்டி யாருன்னே எனக்கு தெரியாதுங்க, அவங்க பண்ண சேட்டைகள் தான் தெரியுமே தவிர அவங்க யாருன்னே தெரியாது என்று கூறியிருந்தார்.
தற்போது இதனை அறிந்த ஸ்ரீரெட்டி, உங்களுக்கு தெரியுமா என்னிடம் நிறைய செருப்புகள் இருக்கிறது, உங்களுக்கு வேண்டுமா என்று பதிலடி கொடுத்ததோடு, உங்கள் நிச்சயம் அப்படியே நின்று போனதற்கு என்ன காரணம் என்று பதில் சொல்லுங்கள் என்றும் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.