ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் டூப்ளக்ஸ் பங்களா!!இத்தனை கோடியா?

Janhvi Kapoor Tamil Actress Actress
By Edward Aug 16, 2025 01:30 PM GMT
Report

ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளாக தற்போது பாலிவுட் டோலிவுட்டில் டாப் நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ஜான்வி கபூர். சமீபத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் பரம் சுந்தரி படத்தில் நடித்து மலையாள பெண்ணாக நடித்ததில் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறார்.

மும்பை, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பங்களாவை கட்டியுள்ள ஜான்வி கபூரின் மும்பையின் சொகுசு டூப்ளக்ஸ் பங்களாவில் தற்போது வசித்து வருகிறார்.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் டூப்ளக்ஸ் பங்களா!!இத்தனை கோடியா? | Sridevi Daughter Janhvi Kapoors 65 Crore Rs

மும்பையின் உயர்தர பகுதியான பாலி ஹில்லில் இருக்கும் அந்த வீட்டின் விலை ரூ. 62 கோடி ஆடம்பர டூப்ளக்ஸ் பங்களாவாம். 8,669 சதுர அடி பரப்பளவில் பரந்துவிரிந்து கட்டிடக்கலை நேர்த்தியையும் தனிப்பட்ட அன்பையும் ஒருங்கிணைக்கும் பங்களாவாக இருக்கிறது.

இந்த வீட்டை 2022ல் ஜான்வி கபூர் தனது ஜூஹூ ட்ரிப்ளக்ஸ் வீட்டை பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவுக்கு விற்றப்பின் இந்த டூபிளக்ஸ் வீட்டை வாங்கியிருக்கிறார்.