ஸ்ரீதேவியின் மகளா இது? அசல் பார்பி பொம்மையை போல் தோற்றமளிக்கும் ஜான்வி கபூர்!
தமிழ் சினிமாவில் 80-களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அதன்பின் பாலிவுட் பக்கம் சென்று அங்கும் தனக்கென்ன தனி இடத்தை பிடித்து பெரிய ரசிகர்கூட்டத்துக்கே சொந்தக்காரரானார்.
தமிழில் கடைசியாக விஜயுடன் புலி என்ற படத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு துபாயில் தான் தங்கியிருந்த அறையின் குளியலறையில் இருந்த bath tub-ல் மூழ்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
ஸ்ரீதேவி மறைந்த சில நாட்கள் கழித்து தன் மூத்த மகளான ஜான்வி நடித்த முதல் படமான தடக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதன்பின்னே ஜான்விக்கு ரசிகர் கூட்டம் பெருக தொடங்கியது. அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டாகி நடித்திருந்தார்.
இந்நிலையில் தான் ஜான்வியின் தங்கையும் ஸ்ரீதேவி போனி கபூரின் இளைய மகள் குஷியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது. இதில் ஜான்வி கபூர் பிங்க் நிற ஆடை அணிந்து அசல் பார்பி பொம்மையை போல தோன்றுகிறார்.