ரஜினியின் வெறுப்பை சம்பாதித்த தனுஷ்.. ஸ்ரீதேவி மகளை காப்பாற்றி வரும் தயாரிப்பாளர்?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தன் அண்ணன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த செம்டம்பர் 29 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகியது.
தனுஷுக்கு அடிமேல் அடி
கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நானே வருவேன், பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியால் வசூலில் அடிவாங்கி வருகிறது. இதுஒரு பக்கம் இருக்க தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து விசயத்தில் சூப்பர் ஸ்டார் வீட்டில் மீட்டிங் நடைபெற்று சமரச முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியானது. தனுஷின் சினிமா வாழ்க்கையில் சமீபகாலமாக பல தோல்விகளை சந்தித்து வருகிறார். அதற்கு காரணம் மனைவியை அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளை விவாகரத்து செய்தது தான். இதனால் தனுஷுடன் நடிக்க சில நடிகைகள் ஒதுங்கியும் வருகிறார்கள். அப்படி தனுஷின் வாத்தி படத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்றது.

ஜான்வி கபூர் -தனுஷ்
ஆனால், தமிழில் மகள் நடிக்க விருப்பம் ஆனால், தனுஷுடன் வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம். இதேபோல் பாலிவுட்டில் அக்ஷய் குமார், சாரா அலி கானுடன் தனுஷ் நடித்து வெளியான படம் அட்ராங்கி ரே. இப்படத்தில் சாரா அலிகானுக்கு முன் ஜான்வி கபூரிடம் தான் நடிக்க கேட்டிருந்தார்களாம். ஆனால் அப்போதும் போனி கபூர் வேண்டாம் என்று கூறியுள்ளார். இதன்பின் சாரா அலிகான் கமிட்டாகியிருக்கிறார்.
இருமுறை தன் மகளை நடிக்கவிடாமல் தடுக்க காரணம், தனுஷ் ரஜினியின் வெறுப்பை சம்பாதித்ததால் படத்தின் மார்க்கெட்டை இழந்து வந்தார். அவருடன் நடித்தால் படம் தோல்வி அடையும் என்ற காரணத்தால் போனி கபூர் இப்படியாக நடந்து கொண்டுள்ளார். இந்த செய்தியை சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.