அப்பவே லட்சத்தில் புறண்ட நடிகை ஸ்ரீதேவி? 80 வயது நடிகருக்காக மறைக்கப்பட்ட உண்மை...

Bollywood Salary Sridevi Tamilactress Abidhabh bachchan
By Edward Oct 28, 2021 08:15 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று பின் வாய்ப்பு மற்றும் சம்பளம் அதிகம் கிடைக்கும் என்பதால் பாலிவுட் பக்கம் சென்றுவிடுவார்கள். ஆனால் இந்திய சினிமாவையே தன்னுள் அடக்கி கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

தமிழில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் பல மொழி படங்களில் நடித்து கோடியில் சம்பளம் வாங்கி வந்தார். அப்படி இருக்கையில் பலர் அவரை வாழ விடாமல் தடுத்தார் என்று பல செய்திகள் கசிந்தன. இந்நிலையில், அன்றைய தேதிக்கு இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது அமிதாப்பச்சன் தான்.

கிட்டத்தட்ட 30 லட்சம் அப்போது சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் ஹிந்தி சினிமாவுக்கு சென்ற இரண்டே வருடங்களில் அமிதாப் பச்சனின் சம்பளத்தை ஓரம்கட்டி 35 லட்சம் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார் ஸ்ரீதேவி.

ஆனால் ஒருசிலர் அவர் சம்பளத்தை வெளியில் கூறக்கூடாது என்று கூறி வந்ததால் தயாரிப்பாளர்கள் இந்த உண்மையை ஊடகத்தில் கூட தெரியாமல் மறைத்து வந்துள்ளனர் என்று செய்திகள் லீக்காகியுள்ளது.