பிக்பாஸ் வீட்டில் இலங்கை போட்டியாளர் செய்த செயல்! லீக் செய்த வீடியோ..

biggboss madhumitha biggbosstamil5 iykiperry
By Edward Oct 19, 2021 02:10 PM GMT
Report

பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் 5 சீசன் ஆரம்பித்து 16 நாட்களை தொட்ட நிலையில், லக்சரி பட்ஜெட் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் பஞ்ச தந்திரங்களை குறிக்கும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என 5 விளைமதிப்பில்லாத நாணயங்கள் கண்ணாடி பெட்டிக்குள் பொருத்தப்பட்டிருக்கும். யாருக்கும் தெரியாமல் எடுத்து மறைத்து வைத்திருப்பவர்கள் அடுத்த நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

இதில் ஐக்கி பெர்ரி ஒரு காயினை எடுத்துள்ள நிலையில், இரண்டாவது வருண் நீர் என்ற காயினை எடுத்துள்ளார். மூன்றாவதாக இலங்கை பெண் மதுமிதா நிலம் காயினை தட்டித் தூக்கியுள்ளார். திருடியதுடன் பிக்பாஸிடன் கூறி இந்த ப்ரொமோ காட்சியில் இதுவரை அமைதியாக இருந்த இலங்கை பெண்ணின் விளையாட்டு தற்போது சூடுபிடிக்க ஆரம்பிக்கவுள்ளது.