மரணப்படுக்கையில் நடந்த கொடுமை.. ரஜினி, கமல் பட நடிகையின் பரிதாப மரணம்..
தமிழ் சினிமாவில் தனது 13 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்த நடிகை ஸ்ரீவித்யா. 80, 90களில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீவித்யா சிவாஜி, ரஜினி, கமல், விஜயகுமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்தார்.
சுமார் 800 படங்களுக்கும் மேலாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வந்த ஸ்ரீவித்யா, 2003ல் புற்று நோயால் அவதியுற்று கஷ்டப்பட்டார். பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவித்யா சிகிச்சை பலனின்றி 2006ல் மரணமடைந்தார்.
அவர் மரணம் குறித்து அவருக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர் கிருஷ்ணன் நாயர் அவரின் வாழ்க்கை வரலாறு புத்தக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு தான் மருத்துவர் கிருஷ்ணன் நாயர் மரணமடைந்துள்ளார்.
ஒரு பெண் தன் வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் அவருக்கு வலி நிவாரண மருந்துகள் வாங்கக்கூட வழியில்லாமல் தவித்ததாக, ஸ்ரீவித்யாவை பற்றி மறைமுகமாக தன் புத்தக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புத்தகத்தை கணேஷ்குமாரின் சகோதரி உஷா மருத்துவரின் வாழ்க்கை புத்தகத்தை படித்ததாக கூறியுள்ளார். கே.பி. கணேஷ்குமார் தான் ஸ்ரீவித்யாவிற்கு மருந்துகளை வாங்க தடுத்ததாகவும் கூறியுள்ளார் உஷா.
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ஸ்ரீவித்யாவிற்கு கேரளாவில் இருந்த முன்னாள் அமைச்சரும் நடிகருமான கே.பி கணேஷ்குமாருடன் நெருக்கமாகி இருந்தார்.
இசை பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசையால் கணேஷ்குமார் தலைமையில் அறக்கட்டளை ஆரம்பித்துள்ளார்.
அதிலிருந்துதான் தனக்கு மருத்துவ செலவுகளை பார்க்க கேட்டுள்ளார். ஆனால் இதை செய்யாமல் ஏமாற்றியுள்ளார் கே.பி. கணேஷ்குமார்.