ஒரே கும்மிடுதான் போட்டோம் ! கல்யாணத்துக்கு மொய் 2000 கொடுத்த முதல்வர் வீடியோ..

cm stalin newcouple
By Edward Nov 09, 2021 09:10 AM GMT
Report

சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண பணிகளை மேற்பார்வையிட தனது கான்வாயில் சென்றபோது சாலையோரம் இருந்த உணவகத்தில் உணவருந்திவிட்டு வெளியில் வந்த ஒரு புதமண தம்பதி முதல்வர் வருவதை அறிந்து அவரிடம் திருமண வாழ்த்து பெறமுடியுமா என்ற சந்தேகத்துடன் காத்திருந்துள்ளனர்.

முதல்வரின் கான்வாய் வந்தபோது தலைவரே என் ஒரே குரலில் அழைத்ததும், தான் பயணித்த ஜீப்-ஐ நிறுத்த சொல்லி கீழே இறங்கி தன் காலில் விழுந்த புதுமண தம்பதியை வாழ்த்தி தலா 1000 ரூ பரிசாக வழங்கிவிட்டு 'பொண்ண நல்ல பாத்துக்கோ' என கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இதை விட தங்களுக்கு சந்தோஷமான தருணம் வேரெதுவும் இருக்க முடியாதென பெருமிதம் கொள்கின்றனர் இந்த தம்பதி. இந்த விடியோவை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் என்னப்பா இதெல்லாம் அநியாயத்துக்கு மனுஷன் நல்லவரா இருக்காரே என புகழ்ந்து வருகின்றனர்.

Gallery