கீர்த்தி சுரேஷ் கணவர் அடிமை!! நயன்தாராவின் கணவர்.. எல்லை மீறிய பிரபலம்
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் கோவாவில் இவருடைய திருமணம் விமர்சையாக நடைபெற்று முடிந்தது.
தனது 15 வருட காதலரான ஆண்டனியை கீர்த்தி சுரேஷ் கரம்பிடித்தார். திருமணம் முடிந்த கையோடு நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பட ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது, கீர்த்தி மாடர்ன் உடையில் தாலி தெரியும்படி வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையில் சிக்கியது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் சேகுவேரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் அவருடைய கணவர் குறித்து பேசிய விஷயம் தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரபலம் பேட்டி
அதில், " சினிமா துறையில் பல சீன் போடும் நட்சத்திரங்களை நான் பார்த்துள்ளேன். ஆனால், தாலி தெரியும்படி கீர்த்தி சுரேஷ் செய்த விஷயங்கள் ரொம்பவே ஓவராக இருந்தது.
தாலி என்பது ரொம்பவே பாரம்பரியான ஒன்று. அதை அணிந்தால் பாரம்பரிய உடையைத்தான் அணிய வேண்டும். ஆனால், கீர்த்தி சுரேஷ் செயல் அனைத்திற்கும் அவருடைய கணவர் தட்டில் சம்மதம் கூறுகிறார்.
கீர்த்தி கணவர் விக்னேஷ் சிவன் போன்று மனைவியின் பேச்சை கேட்டுக்கொண்டு அப்படியே நடந்துகொள்ளும் மிக்சராக இருக்கிறார். கீர்த்தி திருமணத்துக்கு முன்பு எவ்வளவோ அசிங்கப்பட்டார். திருமணத்துக்கு பிறகும் இப்படி நடந்துகொண்டால் என்ன அர்த்தம்" என்று கூறியுள்ளார்.