வெண்பாவை சீரியலில் காமிக்காமல் இருக்க இதுதான் காரணம்? இதை மறைச்சிட்டீங்களே!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல். கையில் பேகுடன் நடக்கும் காட்சிகள் மீம்ஸ் கிரியேட்டர்களால் பிரபலமானது. தற்போது 8 வருடங்களுக்கு பிறகு நடக்கும் இந்த சீரியலில் பாரதி ஹேமாவை அமெரிக்காவிற்கு அழைத்து செல்ல முயற்சி செய்கிறார்.

சில உடல் நிலை பிரச்சனையால் ஹேமா மருத்துவமனையில் சேர்க்க சமையலம்மாவை பாரதி கூப்பிடச்செல்கிறார். இப்படி கதை நடந்து கொண்டிருக்க வெண்பா கதாபாத்திரத்தை காட்டாமல் இருந்து வருகிறது சீரியல் குழு. வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை பரினா நடத்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட பரினா தற்போது கர்ப்பமாகியுள்ளாராம்.

வயிற்றில் குழந்தையுடன் நடத்திய போட்டோஹூட்டையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் தான் பரீனாவின் வெண்பா கதாபாத்திரத்தில் சீரியலில் காட்டாமல் இருந்து வருகிறார்களாம். பேறு காலத்திற்கு இரு மாதங்கள் முன்பு மட்டுமே நடிக்கபோவதாகவும் கூறியுள்ளார் பரீனா.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்