இமயமலை சித்தர் சொன்னதை அப்படியே வைக்க சொன்ன ரஜினி!! இயக்குநர் சொன்ன ரகசியம்..
சந்திரமுகி - ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கரியரில் மிகப்பெரிய தோல்வி படமான மாறியதுதான் பாபா திரைப்படம். இப்படத்தினை பலரும் விமர்சித்த நிலையில் ரஜினிகாந்த் எந்த பதற்றமும் இல்லாமல் 3 வருடங்கள் ரெஸ்ட் எடுத்தார். அப்படி இருந்தார் என்று கூறுவதைவிட மெகா ஹிட்டுக்கு 3 வருடம் இன்வெஸ்ட் செய்தார் என்றுதான் கூறவேண்டும்.

அதன்பின் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி என்ற பிளாக் பஸ்டர் படமாக மாறியது. கிட்டத்தட்ட படத்தின் முக்கால் வாசி ஜோதிகாவை மையமான காட்சிகள் தான் அமைந்தது.
ஜோதிகா ஆக்கிரமித்து ஸ்கோர் செய்தாலும், ரஜினிகாந்த் வேட்டையனாக அசாட்டாக தன் கேரக்டரை தட்டித்தூக்கி இருப்பார்.
சமீபத்தில் படத்தினை பற்றி இயக்குநர் பி வாசு பேட்டியொன்றில் சில விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

இமயமலை சித்தர்
அதில், சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு வேட்டையன் கேரக்டர் மட்டும்தான் இருக்கிறது, அவர்தான் இமயமலை கதை சொன்னார்.
அப்போதுதான் அவர் என்னிடம், இமயமலையில் ஒரு சித்தரை பார்த்தேன், அவர் கையில் கம்போடு ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு லகலகலக என்று சொன்னார்.
சத்தத்தை மட்டும்தான் கேட்டேன். இரு நாட்களாகியும் அவரை பார்க்க முடியவில்லை என்று கூறினார். அதிலிருந்துதான் அந்த ஐடியாவை சந்திரமுகி படத்தில் வைத்தோம் என்றார்.