ரூ. 100 கோடி கொடுத்தால் அதை செய்யமாட்டேன்!! நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..
Aishwarya Lekshmi
Tamil Actress
Social Media
Gatta Kusthi 2
By Jai
ஐஸ்வர்யா லட்சுமி
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, கட்டா குஸ்தி 2 படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். சில ஆண்டுகளாக சோசியல் மீடியாக்களில் இருந்து விலகி இருந்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சோசியல் மீடியாகளில் என்னுடைய புகைப்படங்கள் மார்ஃபிங் செயப்பட்டு ஆபாசமாக பகிரப்பட்டதும், தரக்குறைவான கருத்துகள் பதிவானதும் என்னை கடுமையாக பாதித்தது. ஒரு கட்டத்தில் உலகமே எனக்கு எதிராக இருப்பதுபோல் உணர்ந்தேன்.
மேலும் கடந்த ஆண்டு அனைத்து சோசியல் மீடியாக்களில் இருந்தும் விலகினேன். ரூ. 100 கோடி கொடுத்தாலும் மீண்டும் சோசியல் மீடியாவுக்கு வரவேமாட்டேன். ஆன்லைனில் பழகுவதைவிட மக்களை நேரில் சந்தித்து பேசுவதையே விரும்புகிறேன் என்று ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.