அந்த நடிகரை காப்பி அடிக்காதீங்க! எஸ்ஜே சூர்யாவும் இப்படியாகிடுவாரோ..

simbu vijaysethupathi venkatprabhu maanaadu SJSuryah
By Jai Dec 06, 2021 10:58 PM GMT
Report

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்புவின் கம்பேக் படமாக அமைந்த படம் மாநாடு. சிம்புவை தாண்டி இப்படத்திற்கு 50 சதவீதம் உயிர் கொடுத்தவர் யுவன் மற்றும் எஸ் ஜே சூர்யா. சமீபகாலமாக டைரக்‌ஷனை விட்டுவிட்டு நடிப்பில் களம் கண்டு வருகிறார்.

அப்படி மாநாடு படத்தில் கொடுத்த நடிப்பு இப்படத்தில் எஸ்ஜே சூர்யாவுக்குதான் சிறந்தது. அதேபோல் இப்படியே தக்கவைத்த நடிப்பை காட்டாமல் விஜய் சேதுபதி மாதிரி சொதப்பல் படங்களை கொடுக்க வேண்டாம் என்று ரசிகர்கள் இணைத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி படங்களில் அதிகமாக நடிக்க வேண்டும் என்பதற்காக கதைகளை தேர்வு செய்வதில் கோட்டைவிட்டுள்ளார். அப்படி தோல்வி படங்களை லாபம், அனபெல் சேதுபதி, துக்ளக் தர்பார் போன்ற படங்கள் அந்த லிஸ்டில் இருக்கிறது.

விஜய் சேதுபதி செய்த தவறை எஸ் ஜே சூர்யா செய்தால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது சிரமம் என சினிமா வட்டாரத்தில் இருப்பார்கள் எஸ் ஜே சூர்யாவிற்கு கருத்துகளாக கூறி வருகிறார்களாம்.