என்னத்த டேக் போவீங்க நீங்க, பெருசா பண்ணிற போற!! சிம்புவை அப்படி பார்த்த பிரபல நடிகர்..

Dhanush Silambarasan Gossip Today
By Edward Apr 27, 2024 09:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் ஸ்டெண்ட் மாஸ்டராக பணியாற்றி அனைவரையும் கவர்ந்தவர் தான் ஸ்டெண்ட் சில்வா. பல படங்களில் வில்லன் ரோலில் நடித்து பிரபலமான சில்வா, சமீபத்தில் தன்னுடைய மனைவி, மற்றும் மகள், மகனுடன் பேட்டியொன்றில் கலந்து கொண்டு நடிகர்களுடன் நடித்ததை பற்றிய சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

என்னத்த டேக் போவீங்க நீங்க, பெருசா பண்ணிற போற!! சிம்புவை அப்படி பார்த்த பிரபல நடிகர்.. | Stunt Silva Open About Simbu Late Shooting Issues

தனுஷின் வளர்ச்சி எனக்கு மிகவும் சந்தோஷம். நடிகராக இருந்து பல விசயங்களை செய்து வருகிறார். வணங்கான் படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் பாலா என்னிடம், விமானத்தில் வந்து கொண்டிருந்த போது எங்களுக்கு முன் தனுஷ் இருந்தார். கிட்டத்தட்ட 7 மணி நேரம் எழுதிக்கொண்டே இருந்தார். மிகவும் பெருமையாக இருக்கிறது.

மேலும் சிம்பு ஒரு அதிசய குழந்தை தான். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் போது சிம்புவுடன் நான் சொல்லி இருக்கிறேன். நான் ரொம்ப நேரமாக கம்போஸ் பண்ணி வெச்சு இருக்கிறேன். அவர் எங்கயோ உட்கார்ந்துவிட்டு வந்ததும், ரெடி டேக் போலாம் என்று சொன்னார். அப்போது நான், என்னத்த டேக் போவீங்க நீங்க, பெருசா பண்ணிற போறாருன்னு என் மனதிற்குள் நினைத்து கொண்டேன்.

என்னத்த டேக் போவீங்க நீங்க, பெருசா பண்ணிற போற!! சிம்புவை அப்படி பார்த்த பிரபல நடிகர்.. | Stunt Silva Open About Simbu Late Shooting Issues

அதன்பின் அவர் பண்ணதை பார்த்து என்னை காதலிக்க வைத்துவிட்டார். அச்சம் என்பது மடமையடா படத்தில் ஓடமுடியவில்லை என்று அழுது ஃபீல் பண்ணாரு. அதன்பின் 6 மாதம் கழித்து மநாடு படத்தில் என்னை என்ன வேண்டுமானாலும் செய் என்று சொன்னார் என ஸ்டெண்ட் மாஸ்டர் சில்வா தெரிவித்திருக்கிறார்.