நடிகை செருப்பால் அடித்தும் திருந்தலையா? பயில்வான் விசயத்தில் தனுஷை இழுத்துவிட்ட பாடகி..
சமுகவலைத்தலைத்தளத்தில் நட்சத்திரங்களின் அந்தரங்க மற்றும் தனிப்பட்ட விசயத்தை கூச்சமில்லாமல் அவதூறாக பேசி வருகிறார் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன். எம்ஜிஆர்,ரஜினிகாந்தில் ஆரம்பித்து இளம் நடிகைகள் வரை அவர்களின் அந்தரங்க விசயங்களை வெளியுலகத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.
இதற்கு ஆண் பெண் பிரபலங்கள் கூட எதிர்த்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதற்கு ஒருமுறை நடிகை ராதிகா சரத்குமார் கூட தன்னை அசிங்கப்படுத்தி பேசியதாக கூறி பயில்வானை கடற்கரை பக்கத்தில் அடித்துள்ளார்.
மேலும் பத்திரிக்கையாளர்கள் கூட பயில்வானை விமர்சித்து தான் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல பாடகி சுசித்ரா, தன்னை பற்றி பைத்தியம், யார் கூப்பிட்டாலும் அட்ஜெஸ்ட் செய்வேன் என்று கூறிய வீடியோவை பார்த்துள்ளார்.
உடனே பயில்வானுக்கு கால் செய்து தனுஷ் விவாகரத்து சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்றில் இப்படியாக என்னை அசிங்கப்படுத்தி பேசியிருக்கிறீர்கள் என்று கடுமையாக திட்டியுள்ளார். மேலும் இதை செய்ய சொல்லி தனுஷ் எவ்வளவு பணம் கொடுத்தார் என்றும் கேட்டுள்ளார்.
ஹன்சிகா, திரிஷா போன்றவர்களின் பார்ட்டி புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. அதையும் உங்களுக்கு அனுப்புகிறேன் என திட்டியுள்ளார். மேலும் 2017ல் நடந்த என்னுடைய டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது.
இதுகுறித்து தனுஷ், வெங்கட் பிரபு, கார்த்திக் குமார் உட்பட சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் பயில்வான் பின்னணியில் இவர்களும் இருப்பதாகவும் அப்போதே புகாரில் தெரிவித்துள்ளார் சுசித்ரா.