சரத்குமாருடன் 16 வருட திருமண வாழ்க்கை!! விவாகரத்தால் கஷ்டப்பட்டதாக கூறும் முதல் மனைவி சாயா தேவி..

Sarathkumar Varalaxmi Sarathkumar Gossip Today Divorce
By Edward Jul 25, 2023 03:47 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சரத்குமார் 1984ல் சாயா தேவி என்பவரை திருமணம் செய்து வரலட்சுமி என்ற மகளை பெற்றெடுத்தார். அதன்பின் 16 வருட வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2000 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

சரத்குமார் சில வருடங்களில் நடிகை ராதிகாவை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். ஆனால் சாயா தேவி தன் மகள் வரலட்சுமி சரத்குமாருடன் வாழ்ந்து வருகிறார். வெளியுலகத்திற்கு தன்னை பிரப்படுத்திக் கொள்ளாத சாயா தேவி சமீபத்தில் பேட்டியொன்றில் விவாகத்து பற்றி பகிர்ந்துள்ளார்.

சரத்குமாருடன் 16 வருட திருமண வாழ்க்கை!! விவாகரத்தால் கஷ்டப்பட்டதாக கூறும் முதல் மனைவி சாயா தேவி.. | Suffered A Lot Because Of Divorce Sarathkumars

அதில், சுற்று இருப்பவர்கள் எல்லாரும் திருமணம் செய்து கொள்கிறார்கள், வீட்டில் கட்டாயப்படுத்தியும், வயதாகிறது என்றெல்லாம் நினைத்து பலர் திருமணம் செய்து கொண்டு அந்த திருமணம் பிடிக்காமல் சகித்துக்கொண்டும் வாழ்கிறார்கள். அல்லது விவாகரத்து செய்து பிரிந்துவிடுகிறார்கள்.

விவாகரத்து பெற்று பிரியும் போது சிறு குழந்தை அப்பா வேண்டுமா அல்லது அம்மா வேண்டுமா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதுமிகவும் தவறு. குழந்தைக்கு தாய் தந்தை இருவரும் முக்கியம் தன் விவாகரத்து செய்த பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்.

நானும் அந்த பிரச்சனைகளை கடந்து வந்தேன் என்றும் சேவ் சக்தி என்ற பெண்களுக்கான அறக்கட்டளை மூலம் பல பெண்கலுக்கு உதவி வருவதாகவும் சாயா தேவி தெரிவித்துள்ளார். அந்த அறக்கட்டளையை என் மகள் வரலட்சுமி தான் துவங்கியதாகவும் சாயா தேவி கூறியுள்ளார்.

You May Like this Video