சினேகா இப்படி இருப்பாங்கன்னு நினைக்கல! அங்காடித்தெரு சோபியா ஓபன் டாக்
சுகுணா நாகராஜன்
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் 2010ல் மகேஷ், அஞ்சலி, வெங்கடேஷ், பாண்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது அங்காடி தெரு படம். இப்படத்தில் சோபியா ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் சுகுணா நாகராஜன். அங்காடி தெரு படத்தில் இணைய இயக்குநராக பணியாற்றிய நாகராஜனை, சுகுணா திருமணம் செய்து தற்போது பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் , 2008ல் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து நிறைய அரியர் வைத்திருந்தேன். ஃபேஷன் டிசைனிங் முடித்தப்பின் அவர் பண்ணும் படத்தில் காஸ்டியூம் டிசைனர் வேலை கொடுப்பார் என்று நினைத்தேன்.
இதற்கு நிறைய படிக்க வேண்டும் என்று அவரிடம் சொல்லி டார்ச்சர் பண்ணி, எடுத்துவிட்டேன். என் பையன் பிறந்த 6 மாதத்தில் குழந்தையை விட்டு படிக்கச்சென்றுவிட்டேன். கல்லூரி திறப்பதற்கு 3 நாட்களுக்கு முன், நான் கல்லூரியில் சேர்ந்துவிட்டேன்.
1 லட்சம் ஃபீஸ் கட்டவேண்டும் என்று சொன்னதும், உனக்கு பிடித்ததை செய் என்று கணவர் சொல்லிவிட்டார் என்று சுகுணா தெரிவித்துள்ளார். மேலும் அங்காடி தெரு படத்தில் விளம்பர சீனில் நடிகை சினேகா நடித்துருப்பார்.
சினேகா மேடம் எப்போதும் நல்லா பேசுவாங்க,
அவங்க எல்லாம் இவ்வளவு சிம்பிளா
இருப்பாங்கன்னு நாங்க நினைக்கவில்லை. என் கூட
மட்டுமில்லாமல் அந்த படத்தில் நடித்த
எல்லாருடனும் சினேகா மேடம் பேசிட்டு தான்
இருக்காங்க என்று சுகுணா பகிர்ந்துள்ளார்.