ஆம்பள மூஞ்சா இருக்கே! கிண்டல் செய்த நடிகரை நேரில் திட்டிய பிரபல நடிகை..
80, 90களில் முன்னணி நடிகையாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை சுஹாசினி. முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகை சுஹாசினி பகல் நிலவு படத்தில் நடிக்க இயக்குனர் மணிரத்னம் கூப்பிட்டும் நடிக்க முடியாது என கூறியுள்ளார்.
இதனால் தான் நான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்று சுஹாசினி பற்றி கணவர் மணிரத்னம் சமீபத்தில் கூறியிருந்தார். அப்படி போல்ட்டான நடிகையாக இருந்த சுஹாசினியை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் விமர்சித்து பேசியுள்ளார்.
சுஹாசினி அறிமுகமாகிய முதல் படத்தின் போது பயில்வான் இது பொம்பள மூஞ்சியா ஆம்பள மாதிரி இருக்கு என்று விமர்சித்து எழுதியுள்ளாராம். பட விழா ஒன்றில் நடிகை சுஹாசினியை பார்த்த பயில்வான் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் நல்லா நடிக்கிறீர்கள் என்று கூறி பாராட்டியுள்ளார்.
அதற்கு சுஹாசினி, உண்மையை சொல்லுங்க, நீங்கள் தான் என்னை அப்படி கூறினீர்களே என்று நேராகவே கூறி திட்டியுள்ளாராம்.