பணத்திற்காக 8 அப்பாவிகளின் உயிர் பலி! கனடியன் பாடகரால் ஏற்பட்ட விபரீதம்!

canadian rapper Travis Scott Drake
By Edward Nov 08, 2021 09:20 AM GMT
Report

கடந்த 5-ம் தேதி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஆஸ்ட்ரோவேல்ட் என்ற பிரபல rap பாடகர் டிராவிஸ் ஸ்காட்டின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 50000 பேர் பார்வையாளர்களை கொண்டு நடைபெற்ற இதில் மற்றோரு பிரபல rap பாடகரான ட்ரேக்கும் perform செய்திருந்தார்.

இந்த இசை கச்சேரியை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இந்நிலையில் கூட்டநெரிசலில் சிக்கி 8 அப்பாவி ரசிகர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 14ல் இருந்து 27 பேர் காயமடைந்துள்ளனர் என்ற தகவலும் தெரிவித்துள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த ஒரு ரசிகர் கொடுத்த புகாரின் பேரில் ஹூஸ்டன் ஹாரிஸ் கவுண்டி மற்றும் டிரேக் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது.