கமலுடன் அந்த இடத்துக்கு போயிருக்க வேண்டும்!! நடிகை சுகன்யா பகிர்ந்த ரகசியம்...
நடிகை சுகன்யா
இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு டாப் நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுகன்யா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த சுகன்யா புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

பரதநாட்டிய கலைஞராகவும் இருந்து வந்த சுகன்யா, சென்னையில் பல மேடைகளில் பரதநாட்டிய அரங்கேற்றம் நடத்தியிருக்கிறார். உச்சத்தில் இருந்த சுகன்யா, 2002ல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்த ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்தார் சுகன்யா.
மகாநதி
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் கமலுடன் இரண்டு படங்களில் பணியாற்றியது குறித்து பகிர்ந்திருக்கிறார். அதில், மகாநதி படத்திற்கு முன் சினிமாத்துறையில் இருந்து ஒரு நடன நிகழ்ச்சிக்காக சிங்கப்பூருக்கு கமலுடன் போயிருக்க வேண்டியது. ஆனால் அந்த ப்ரோகிராம் செய்ய முடியவில்லை.

மூன்று ரிகர்சல்கள் சொன்னார்கள், ஆனால் பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையத்தில் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் ஒத்திகைக்கு செல்ல முடியவில்லை. ப்ரோகிராமும் செய்யவில்லை. அதனால் கமலுடன் இனி வேலையே செய்யமுடியாது என்று நினைத்தேன், ஆனால் மகாநதி, இந்தியன் என இரு படங்கள் அவருடன் நடத்தேன் என்று சுகன்யா தெரிவித்துள்ளார்.
