திருமணமாகி ஒராண்டில் விவாகரத்து? 52 வயதில் தனிமையில் இருக்க நடிகை சுகன்யாவுக்கு இதுதான் காரணமா?

Sukanya Tamil Cinema
By Edward Apr 29, 2022 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவரும் நடிகை சுகன்யா. 90ஸ் கிட்ஸ்களால் கவரப்பட்ட நடிகையாக 22 வயதில் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

இப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். கடந்ஹ்ட 2002ல் ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பிறகு ஒரே ஒரு ஆண்டு தான் சந்தோஷமாக வாழ்ந்துள்ளனர். ஓராண்டிலே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட 2003ல் விவாகரத்து செய்து பிரிந்து சென்று விட்டனர்.

விவாகத்துக்கு பின் சில காலம் சினிமாவை விட்டு விலகி பின் சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். கணவரை விட்டு 2001ல் ஆட்சியில் இருந்த ஒரு அமைச்சருடன் ரகசிய தொடர்பில் இருந்துள்ளார் என்ற செய்தி பரவியது.

இதற்கு சுகன்யா மறுப்பு கூட தெரிவிக்கமால் அவரை திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாகவும், திருமணத்திற்கு பிறகு ஸ்ரீதர் சுகன்யாவிற்கு பல கண்டீஷன்களை போட்டுள்ளாராம்.

சுகன்யா நடிப்பதை விரும்பாத கணவர் இனிமேல் திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடிக்கக்கூடாது என்றும் எக்குத்தப்பான கேள்விகளை கேட்டும் வந்துள்ளாராம்.

இதனால் தான் சுகன்யா அவரை விவாகரத்து செய்து 20 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருகிறாராம். தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து சில புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

சுகன்யா ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் ராமரின் உருவத்தை நெற்றியின் மேல் வரைந்து இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.