நடிகை ஜாக்குலின்-கு ஜெட் விமானம் பரிசு!! 200 கோடி மோசடி மன்னன் செய்த செயல்..
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மோசடி வழக்கில் சிக்கி கைதான சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமாக இருந்ததை வைத்து சர்ச்சையில் சிக்கினார்.
சுகேஷ் சந்திரசேகர், பல கோடி ரூபாயுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தபோது ஜாக்குலின் பெர்னாண்டஸை தீவிரமாக காதலித்ததாகவும் அவருடன் பல இடங்களில் தனிமையில் இருந்ததாகவும் கூறி செய்திகளும் புகைப்படங்களும் வெளியானது. ஆனால் ஜாக்குலின் அதனை மறுத்தார்.
இதனிடையே சிறையில் இருந்துகொண்டே ஜாக்குலினுக்கு சுகேஷ் எழுந்திய காதல் கடிதங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறையில் இருந்து கொண்டே, 10 கோடி ரூபாய் வரை ஜாக்குலினுக்கு பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஜெட் விமானம் பரிசு
இந்நிலையில் காதலர் தினத்தன்று சுகேஷ் நடிகை ஜாக்குலினுக்கு ஜெட் விமானத்தை பரிசாக கொடுத்துள்ளாராம். அந்த ஜெட் விமானத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குறிக்கும் விதமாக ஆங்கிலத்தில் ஜே எஃப் என்று எழுதபட்டுள்ளது. மேலும் சுகேஷ் எழுதிய கடிதத்தில், நான் என் காதலி ஜாக்குலினுக்கு ஜெட் விமானத்தை அனுப்புகிறேன்.
இந்த விமானம் குற்றச்செயல்களால் கிடைத்த பணத்தை கொண்டு வாங்கவில்லை. அடுத்த பிறவி என்று எனக்கு இருந்தால் ஜாக்குலினுடைய இதயமாக பிறக்க விரும்புகிறேன். அவருக்குள் நான் துடித்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன்.
நீ என் காதலியாக இருப்பதால் இந்த உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியான மனிதன் நான் தான். ஜாக்குலின் போன்ற மிகவும் அழகான, அற்புதமான பெண் காதலியாக கிடைக்க நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். பேபி நீ எப்போதும் வேலை, படப்பிடிப்பிற்காக உலகம் முழுவதும் பறந்து கொண்டிருப்பாய், இப்போது இந்த ஜெட் விமானத்துடன் உன் பயணம் விருப்பப்படி மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கும் என்று சுகேஷ் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.