சன் டிவி சீரியல்களில் சிறந்த நடிகை இந்த ஹீரோயின் தான்!! வெளியான தகவல்..
சின்னத்திரை
வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகைகளும் டாப் இடத்தினை பிடித்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். அந்தவகையில், கர்நாடகாவை சேர்ந்த நடிகை ஸ்வாதி கொண்டே, கன்னட படத்தில் நடித்து பின் தமிழ்நாட்டு பக்கம் வந்தார்.
ஸ்வாதி கொண்டே
விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார் ஸ்வாதி. பிரியா ரோலில் நடித்த ஸ்வாதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
கடந்த ஆண்டு இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், சன் டிவியில் துவங்கப்பட்ட மூன்று முடிச்சு சீரியலில் நடிக்க துவங்கினார். தற்போது டிஆர்பியில் இந்த சீரியல் டாப் இடத்தினை பிடித்து வருகிறார். சீரியலில் நடித்துக்கொண்டே படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்வாதி.
சமீபத்தில் கூட மெய்யழகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். நடிகை ஸ்வாதி கொண்டே, ஒரு புதிய கார் ஒன்றினை வாங்கிருந்தார்.
சிறந்த நடிகை
இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிறந்த நடிகை மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் சன் தொலைக்காட்சி சீரியல்களில் இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதினை நடிகை ஸ்வாதி கொண்டே வென்றுள்ளார். மூன்று முடிச்சு சீரியலுக்காக இந்த விருதினை வாங்கியதற்கு ஸ்வாதி கொண்டேவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.