தளபதிக்கே இந்த நிலைமை.. அடக்க கண்டிஷன் போட்ட சன் டிவி!! எஸ்கேப்-ஆன நடிகர் விஜய்..

Vijay Venkat Prabhu Gossip Today Sun Pictures Greatest of All Time
By Edward May 15, 2024 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வந்த இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் நடந்து முடிந்துள்ளது. தற்போது கோட் படத்தின் சிஜி வேலைகளுக்காக நடிகர் விஜய் லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டிக்கு சென்றிருக்கிறார்.

தளபதிக்கே இந்த நிலைமை.. அடக்க கண்டிஷன் போட்ட சன் டிவி!! எஸ்கேப்-ஆன நடிகர் விஜய்.. | Sun Pictures Contidion For Vijay Goat Satellite

இந்நிலையில் கோட் படத்தின், சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒருசில கண்டிஷன்கள் போட்டுள்ளது இணையத்தில் கசிந்துள்ளது. ஆரம்பத்தில் தி கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 55 கோடிக்கு கேட்டு பல கெடுபிடிகளை படத்திற்கு விதித்ததாம்.

அதாவது படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்திற்குள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவோம் என்றும் நாங்கள் சொல்லும் தேதியில் தான் படத்தை வெளியிட வேண்டும் என்றும் படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் இருக்கக்கூடாது என்றும் அடுத்தடுத்த கண்டீசன்களை போட்டிருக்கிறது. இதற்கு தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனமும் ஓகே சொல்லிவிட்டதாம்.

இதன்பின் மற்றுமொரு இறுதி கண்டிஷனாக சன் டிவி-க்காக நடிகர் விஜய் 2 மணிநேரம் ஒதுக்கித்தர வேண்டும் என்று கேட்டதற்கு நடிகர் விஜய் கொஞ்சம் கூட யோசிக்காமல் நோ சொல்லிவிட்டாராம். இதனால் டென்ஷனான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தி கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை ரத்து செய்திருக்கிறது.

தளபதிக்கே இந்த நிலைமை.. அடக்க கண்டிஷன் போட்ட சன் டிவி!! எஸ்கேப்-ஆன நடிகர் விஜய்.. | Sun Pictures Contidion For Vijay Goat Satellite

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து தற்போது ஜீ நிறுவனத்திற்கு கோட் படத்தின் சாட்டிலைட் உரிமை கைமாறியிருக்கிறதாம். இப்போதே இப்படியொரு சிக்கலை சந்தித்துள்ள விஜய், படத்தின் ரிலீஸின் போது என்னென்ன சிக்கல்களை சந்திக்க நேரிடுமோ என்று பலர் பேசி வருகிறார்கள்.