இரவு நேரத்தில் அந்த மாறி கெட்ட பழக்கத்தை விட நினைக்கிறேன், ஆனால் விட முடியல.. நடிகை சுனைனா ஓபன் அப்
2008 -ம் ஆண்டு வெளியான "காதலில் விழுந்தேன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இதன் பின் பல படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான "லத்தி" திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சுனைனா ஓபன் அப்
இந்நிலையில் பேட்டி அளித்த சுனைனா பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், " நான் சிறுவயதில் இருந்து சமைக்க பிடிக்கும். திரைத்துறையில் வராமல் இருந்திருந்தால் செஃப் ஆக மாறியிருப்பேன். பள்ளியில் படிக்கும் போது நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது".
"அப்போதே பல கலைகளில் பயின்று வந்தேன். என்னுடைய வாழ்க்கையில் பல தவறுகள் செய்கிறேன் அதில் ஒன்று தான் இரவு நேரத்தில் மொபைல் மற்றும் லேப்டாப் பயன்படுத்தி கொண்டிருப்பது .மேலும் டி, காபி குடிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை கொஞ்சம் குறைக்க நினைக்கிறன். ஆனால் இந்த கெட்ட பழக்கத்தை விட முடியவில்லை" என்று கூறியுள்ளார்.