யூடியூப் பிரபலத்துக்கு இரண்டாம் தாரமாகப் போகும் நடிகை சுனைனா!! வருங்கால கணவர் இவர்தானா?
நடிகை சுனைனா காதலில் விழுந்தேன் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகம் ஆனவர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை போன்ற பல படங்களில் நடித்தார். அதன் பின் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன ரோல்கள், கெஸ்ட் ரோல்கள் என எது கிடைத்தாலும் நடித்து வருகிறார்.
மேலும் சமீபத்திய வருடங்களாக ரெஜினா ஏராளமான வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். நடிகை சுனைனாவுக்கு தற்போது 35 வயதாகிறது. அவருக்கு திருமணம் எப்போது என தொடர்ந்து பேட்டிகளில் கேள்விகள் வந்து கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன் நடிகை சுனைனா தனது காதலர் கையை பிடித்து இருக்கும் போட்டோவை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சுனைனா, கையில் மோதிரத்துடன் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்ற பதிவினை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் சுனைனா யாரை காதலித்து திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் யூடியூப் சேனல் வைத்திருக்கும் Khalid Al Ameri என்பவரை தான் சுனைனா திருமணம் செய்யவிருக்கிறாராம். சுனைனா பதிவு செய்த புகைப்படத்தை டெலீட் செய்தாலும், Khalid Al Ameri பகிர்ந்த புகைப்படத்தை வைத்து அவர் தான் சுனைனாவின் வருங்கால கணவர் என்று கூறப்படுகிறது.
மேலும் Khalid Al Ameri ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் பெற்று மனைவியை விவாகரத்து பெற்றுள்ளார். Khalid Al Ameri முதல் மனைவி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அவரை விவாகரத்து செய்துவிட்டேன் என்று கூறியும் இருக்கிறார். விரைவில் சுனைனாவுக்கு - Khalid Al Ameri-க்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
HYU8C


