மார்க்கெட் இல்லாமல் CWC நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் தமன்னா!! 2 நடிகைகளை புக் செய்த பிரபல இயக்குனர்
பேய் படங்களுக்கென்றே பேர் போன இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சுந்தர் சி. பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த சுந்தர் சி சமீபத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வருகிறார்.
அதனை உடைக்க அரண்மனை 2, தலைநகரம் 2 போன்ற படங்களை நம்பி இருக்கிறார். அப்படி தான் இயக்கும் அரண்மனை 2 படத்தில் புதிய முயற்சிகளை வைத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்து அதன்பின் அவர் விலகியதால் சுந்தர் சி லீட் ரோலில் நடிக்கவுள்ளார்.
அரண்மனை 2வில் இரண்டு கதாநாயகிகள் இருப்பதால் நடிகை ராஷி கண்ணாவை புக் செய்தனர். இரண்டாம் ஹீரோயினாக நடிகை தமன்னா பேர் அடிப்பட்டது. ஆனால் தமன்னாவிம் மார்க்கெட் தற்போது தமிழில் சரியாக வேலை செய்யவில்லை.
அப்படி தமிழில் மார்க்கெட்டை இழந்து வந்த தமன்னா, ரஜினிகந்தின் ஜெயிலர் படத்தில் நடித்து அதன் வெற்றியை வைத்து கேரியரை தூக்க காத்திருக்கிறார்.
இந்த நிலையில் அரண்மனை 2வில் தமன்னா கமிட்டாகி இருக்கிறார் என்றும் அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த நடிகரும் குக் வித் கோமாளி பிரபலமுமான சந்தோஷ் பிரதாப் நடிக்கவுள்ளாராம்.
ரஜினி, விஜய், சூர்யா, அஜித் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த தமன்னா சிறிய நடிகருக்கு ஜோடியாக நடித்திருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.