தீயாய் பரவும் விவாகரத்து மேட்டர்!! ஒரேவொரு போட்டோவால் வாயடைக்க வைத்த நடிகை கேப்ரியல்லா..
சுந்தரி சீரியல்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மக்களிடம் மிகவும் பிரபலம். டாப் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் சுந்தரி சீரியல் இடம்பெற்றுவிடும்.
ஒரு நேர்மையான கலெக்டராக தனது வேலையை செய்யும் சுந்தரிக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள், சவால்கள் வருகின்றன.
ஆனால் அதையெல்லாம் நேர்மையாக எதிர்க்கொண்டு மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றது. தற்போது இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.
சிரியல் கிளைமேக்ஸ் ஷூட்டிங் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில், கேப்ரியல்லா சன் டிவியை விட்டு கிளம்புவதால் ரசிகர்களுக்கு வருத்தமான செய்தியாக உள்ளது.
கேப்ரியல்லா விவாகரத்து மேட்டர்
இதற்கிடையில், கேப்ரியல்லா தன் கணவர் ஆகாஷை சமீபத்தில் பிரிந்துவிட்டார் என்றும் அவருக்கு சீரியலில் நடிக்க பிடிக்காத காரணம் தான் அதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இணையத்தில் இப்படியான செய்திகள் வெளியானதை அறிந்த கேப்ரியல்லா, வேறுவழியின்றி தன் கணவர் ஆகாஷுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.