காதல் சர்ச்சைக்கு விளக்கம் அளித்த சுனிதா, உமைர்.. CWC செட்டில் எடுத்த அழகிய போட்டோஷூட்
குக் வித் கோமாளி சீசன் 6 துவங்கி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ஷபானா, பிரியா ராமன், உமைர், லட்சுமி ராமகிருஷ்ணன், நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் காஸ்மீரில் இருந்து வந்து குக் வித் கோமாளியில் கலக்கிக்கொண்டிருப்பவர்தான் உமைர். இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், போட்டியாளர் உமைர் மற்றும் கோமாளியாக இருக்கும் சுனிதா இடையே எதோ உள்ளது என்கிற வதந்தி நிறைய சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து உமைர் மற்றும் சுனிதா இருவரும் சமீபத்தில் ஒரு Youtube பேட்டியில் பேசியுள்ளனர்.
அதில் அவர்கள், "நாங்கள் நண்பர்கள், எங்களுக்கு ஒரு நல்ல பிணைப்பு உள்ளது, அதுவே போதுமானது. நாங்கள் எதற்கும் விளக்கம் அளிக்க தேவையில்லை. ஆனால் இந்த பெண்ணுடன் எனது பிணைப்பு என்னவென்று எனக்கு தெரியும் என உமைர் கூறியுள்ளார்.இதன்மூலம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த காதல் சர்ச்சை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, உமைர் மற்றும் சுனிதா இருவரும் குக் வித் கோமாளி செட்டில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..


