என்னிடம் வேற தான் எதிர்ப்பாக்குறாங்க! உண்மையை கூறிய க்ளாமர் நடிகை சன்னி..
அந்த மாதிரி படங்களில் வெளிநாட்டில் நடித்து வந்தவர் நடிகை சன்னி லியோன். சில ஆண்டுகளுக்கு முன் அப்படி நடிப்பதை நிறுத்திவிட்டு இந்தியாவில் செட்டிலாகி இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். பின் பாலிவுட்டில் குத்தாட்டம் போட்டு வந்த சன்னி லியோன், முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பின் பெற்றார்.
தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சன்னி லியோன் தமிழில் ஒருசில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், 40 வயதான சன்னி லியோன் தனது திரையுலக பயணம், நல்லது, கெட்டது மற்றும் தனது மோசமான தருணங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்நிலையில், சன்னி லியோன் தனது வாழ்க்கை வரலாற்றுப் படமான “கரன்ஜித் கவுர்” – தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோனுக்குப் பிறகு, அனாமிகா என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
40 வயதான என்னிடம், நான் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் அவ்வாறு நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு நல்ல சமநிலையான கதாபாத்திரம், காதல் இருக்கிறது, நெருக்கமான காட்சிகள் உள்ளன,
ஆனால் இது மக்கள் என்னிடம் வழக்கமாக எதிர்பார்க்கும் கதாபாத்திரம் அல்ல என்று குறிப்பிட்டு பேசியுள்ளார் சன்னி லியோன்.