பயத்தில் நெல்சனுக்கு கடிவாளம் போட்ட தயாரிப்பு நிறுவனம்! ரூட்டை மாற்றிய சூப்பர் ஸ்டார்..

Rajinikanth Nelson Dilipkumar Sun Pictures
By Edward Jun 09, 2022 06:00 AM GMT
Report

நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தினை இயக்கிய நெல்சன் திலீப்குமாரை சமீபகாலமாக இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. படத்தின் லாஜிக் இல்லாமல் இப்படியொரு படத்தினை எடுத்துள்ளாரே என்று விஜய் ரசிகர்களுக்கும் ஷாக்காக இருந்தது.

அந்தவகையில் பீஸ்ட் படம் வெளியாகும் முன்பே நெல்சனை வைத்து சூப்பர் ஸ்டார் சன்பிக்சர்ஸ், அனிருத் கூட்டணி அதிகாரப்பூர்வமானது. தலைவர் 169ஐ நெல்சன் இயக்க இருப்பதால் பீஸ்ட் படத்தில் பிளாப்பால ரஜினி சற்று குழப்பத்தில் இருந்து மீண்டும் கமிட்டாகினார்.

இதனால் ரஜினியாலும் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தாலும் நெல்சன் மீது நம்பிக்கை எழவில்லை. இதனால் கே எஸ் ரவிக்குமாரை சூப்பர் ஸ்டார் திரைக்கதைக்கு பயன்படுத்த போவதாகவும் செய்திகள் வெளியாகியது. தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் பட்ஜெட்டில் கைவைத்துள்ளது.

ஆரம்பத்தில் எத்தனை கோடி வேணாலு தருகிறோம் என்று கூறிய தயாரிப்பு நிறுவனம் தற்போது எல்லாத்துக்கு சேர்த்து 150 கோடி தான் கொடுக்கவுள்ளார்களாம். மற்ற செலவுகளை குறைத்துக்கொள்ளும் படியும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் ரஜினிகாந்த் சன் பிக்சர் சொன்னதைக் கேட்டு விட்டு தன்னுடைய படத்தை 100 கோடி பட்ஜெட்டில் எடுத்தால் பெரிய அளவில் செட்டு எல்லாம் போட முடியாது. அதனால் தன்னுடைய படத்திற்கான மார்க்கெட் குறைந்துவிடும் என நினைத்துள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இருவரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் பட்ஜெட்டை பற்றி பேசியுள்ளனர்.