மார்க்கெட் இல்லாமல் வடிவேலுவுடன் டூயட் போட்ட நடிகைகள்!! சம்பளமே 25 லட்சம் வாங்கிய நடிகை..
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராகவும் வைகைப்புயல் என்ற புகழையும் தன் திறமையை கொண்டு வாழ்ந்து வருபவர் நடிகர் வடிவேலு. ராஜ் கிரண் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட வடிவேலு தற்போது காமெடி லிஜெண்ட் ஆக திகழ்ந்து வருகிறார். காமெடி நடிகராக சில நடிகைகளுடன் ஜோடிப்போட்டால் மார்க்கெட்டில் இருந்த டாப் நடிகைகளுடனும் ஜோடிப்போட்டு டூயட் ஆடியிருக்கிறார்.
அப்படி நடிகை அசினுடன் போக்கிரி படத்தில் கஜினி பட பாடலான சுட்டும் விழி சுடரே பாடலுக்கு ரீகிரியேட்டு டூயட் ஆடியிருக்கிறார்.
அசினை போன்று தமிழில் டாப் இடத்திற்கு முன்னேறிய நடிகை தமன்னா தில்லாலங்கடி படத்தில் டூயட் பாடலுக்கு ஆட்டம் போட்டிருப்பார்.
தெனாலி ராமன் படத்தில் மார்க்கெட்டை இழந்த சூழலில் வடிவேலுவுடன் நடித்தும் டூயட் பாட்டிற்கு ஆட்டம் போட்டும் இருக்கிறார் நடிகை சதா. அப்படத்திற்காக நடிகை சதாவுக்கு 25 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாம்.
அவரை தொடர்ந்து அவருடன் ஜோடிப்போட்டு ஆட்டம் போட்டவர் நடிகை தேஜாஸ்ரீ. இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் பஞ்சவர்ணகிளி என்ற பாடலுக்கு டூயட் ஆடியிருக்கிறார்.
நடித்து ஒருசில படத்திலேயே டாப் இடத்தினை பிடித்த நடிகை ஸ்ரேயா சரண், இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்ற படத்தில் வடிவேலுவுடன் நடித்தும் ஆட்டமும் போட்டிருப்பார். ஸ்ரேயா சரனும் அப்படத்திற்காக மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்கியிருக்கிறார்.
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் மற்றொரு நடிகையாக நடித்த நடிகை மோனிகா ஆசை கனவே பாடலுக்கு அவருடன் டூயட் ஆடி கிளாமரில் தூக்கலாக ஆடியிருப்பார்.