சூப்பர் சிங்கர் 8யில் மீண்டும் ஸ்ரீதர் சேனா! இறுதி சுற்றுக்கு தேர்வானவர்கள் யார் யார் தெரியுமா?

supersinger television bennydayal sridharsena manasi
By Jai Sep 18, 2021 08:31 AM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல ஆண்டுகளாக மக்கள் ஆதரவை பெற்று வருவது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. சீனியர் ஜுனியர், சாம்பியன்ஸ் என பல விதங்களில் போட்டிகளை நடத்தி வருகிறது. தற்போது சீசன் 8 ஆரம்பித்து இறுதி சுற்றினை நெருங்கி வருகிறது.

அனு, முத்துச்சிற்பி, சரத், அபிலாஷ் என நான்கு பேர் ஏற்கனவே இறுதி சுற்றுக்கு தேர்வாகிவிட்டனர். இறுதி சுற்றில் மற்ற இருவர் தேர்வாகும் நிலையில் லைல்ட் கார்ட் ரவுன் இந்த வாரம் நடைபெற்றுள்ளது. அதில் சூப்பர் சிங்கர் 8ல் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பாடி நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வாகுவார்கள். இதில் ஸ்ரீதர் சேனா, மானசி, ஆதித்யா, ஐய்யனார் உள்ளிட்ட பல பாடியிருந்தனர்.

இந்நிலையில் 5வது இறுதி சுற்று போட்டியாளராக ஸ்ரீதர் சேனாவும் 6ஆம் போட்டியாளர் மானசியும் தேர்வாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஸ்ரீதர் சேனா வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தி நடுவர் பென்னி தயாலை திட்டி வந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

சூப்பர் சிங்கர் 8யில் மீண்டும் ஸ்ரீதர் சேனா! இறுதி சுற்றுக்கு தேர்வானவர்கள் யார் யார் தெரியுமா? | Super Singer 8 Finalist Leaked