சூப்பர் சிங்கரில் இருந்து விரட்டி விட்ட தொலைக்காட்சி! பிரியங்கா உங்களுக்கா இந்த கெதி?
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் பல முன்னணி பாடகர்களான சித்ரா, மனோ, எஸ்பி சரண், கல்பனா, பென்னி, உன்னிக்கிருஷ்ணன், அனுராதா உள்ளிட்ட பலர் நடுவர்களாக பணியாற்றி வந்தனர். தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் 8 சீசன் நடந்து கொண்டு வருகிறது.
ஆரம்பத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாகாபா ஆனந்துடன் பாவானா உள்ளிட்ட சிலர் தொகுத்து வழங்கி வந்தனர்.சூப்பர் சிங்கர் 6ல் இருந்து விஜே பிரியங்கா டெஸ்பாண்டே மாகாபாவுடன் தொகுத்து வழங்கு வந்தார். யார் கலாய்த்து பேசினாலும் அதை காமெடி என்று நினைத்து சிரித்துக்கொண்டே செல்வார் பிரியங்கா.
அப்படி சென்று கொண்டிருந்த போது சூப்பர் சிங்கர் 8 சீசன் ஆரம்பமான சமயத்தில் பிரியங்கா பிக்பாஸ் 5ல் கலந்து கொள்ள சென்றதால் அவருக்கு பதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மைனா நந்தினியை மாகாபாவுடன் இணைந்துள்ளனர் தொலைக்காட்சி. பிக்பாஸ் 5 சீசன் முடிந்து ஒருசில வாரத்திற்கு பிறகு பிரியங்கா ரீஎண்ட்ரி கொடுத்தார்.
ஆனால் அதை தொடர்ந்து தொகுத்து வழங்காமல் பிரியங்கா பிக்பாஸ் நண்பர்களான பாவ்னி, மதுமிதா, அபிஷேக் ராஜாவுடன் சேர்ந்து ஹைதராபாத் சென்றார்.
அங்கு சென்று ஒருவாரம் ஆகியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வராததால் மைனா நந்தினியை வைத்தே இந்த சீசனை முடித்துவிட தொலைக்காட்சி நிகழ்ச்சி குழு முடிவெடுத்துள்ளார்களாம். ஏன்மா ஒரு வருஷமா நீ இல்லாம டிஆர்பி குறைஞ்சு போச்சு ஒரு டெடிகேஷன் இல்லையா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.