சூப்பர் சிங்கர் 9 டைட்டில் வின்னர் அருணாவுக்கு முடிந்த நிச்சயதார்த்தம்!! புகைப்படம் இதோ..

Super Singer Star Vijay Tamil Singers
By Edward Feb 13, 2026 09:30 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றும் சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் பலர் பிரபலமாகுவதோடு சினிமா வாய்ப்பையும் பெற்று வருகிறார்கள்.

சூப்பர் சிங்கர் 9 டைட்டில் வின்னர் அருணாவுக்கு முடிந்த நிச்சயதார்த்தம்!! புகைப்படம் இதோ.. | Super Singer 9 Title Winner Aruna Engagement Photo

சூப்பர் சிங்கர் 9 டைட்டில் வின்னர் அருணா

அந்தவகையில், சூப்பர் சிங்கர் 9 சீசனில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலை கைப்பற்றி 50 லட்சம் வீடு, 10 லட்சம் தொகையையும் பரிசாக பெற்றவர் தான் அருணா. இந்நிகழ்ச்சி பின் ஒருசில கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், 60 லட்சம் ரூபாயில் கொடுத்த வீட்டினை இன்னும் வாங்கவில்லை என்று கூறி அதற்கான காரணத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், 60 லட்சம் மதிப்புள்ள ஒரு பரிசு கொடுக்கிறார்கள் என்றால் அதற்காக அரசு வரி கொடுக்க வேண்டும்.

பரிசு கொடுப்பவர்கள் பெருந்தன்மையாக கொடுத்துவிடுவார்கள். நாம் அதற்கான வரியை செலுத்தினால் தான், அதை நமக்கு சொந்தமாக்கிக்கொள்ள முடியும், அதுதான் அரசு ரூல்ஸ் அதனால் டாக்ஸ் கட்டிவிட்டு அந்த வீட்டிற்கு போவோம் என்று கூறியிருந்தார்.

சூப்பர் சிங்கர் 9 டைட்டில் வின்னர் அருணாவுக்கு முடிந்த நிச்சயதார்த்தம்!! புகைப்படம் இதோ.. | Super Singer 9 Title Winner Aruna Engagement Photo

இந்நிலையில், சூப்பர் சிங்கர் அருணாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.