குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியா இது!! புது அவதாரம் எடுத்துட்டாரே..
சிவாங்கி
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் மக்களுக்கு பரீட்சயமானவர் தான் சிவாங்கி.

ஆனால் சூப்பர் சிங்கரை விட அவருக்கு பிரபலத்தை கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். கோமாளியாக சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அந்நிகழ்ச்சியிலேயே போட்டியாளராக களமிறங்கி தனது திறமையை காட்டி இருந்தார்.
இப்போது இசைக் கச்சேரிகள், ஆல்பம் பாடல்கள் என பிஸியாக பாடி வரும் சிவாங்கி தனது இன்ஸ்டாவில் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இசையமைப்பாளர் அவதாரம்
தற்போது பாடகி, நடிகை, டான்சர், சமையல் கலைஞர் என்ற வரிசையில் இசையமைப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். என்னாச்சோ என்ற பாடலை இசையமைத்து அதில் நடனமாடியும் இருக்கிறார் சிவாங்கி.
அப்பாடல் பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் பிரமோ வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.