சூப்பர் சிங்கர் SSJ4 ஜெசிக்காவா இது!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..
சூப்பர் சிங்கர் ஜூனியர்
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் இந்நிகழ்ச்சியின் 11வது சீசன் தற்போது துவங்கவுள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பல போட்டியாளர் பிரபலமாகி சினிமா வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.
ஈழச்சிறுமி ஜெசிக்கா
அந்த வகையில், சூப்பர் சிங்கர் சீசன் 4ல் இரண்டாம் இடம் பிடித்தவர் கனடா வாழ் ஈழச்சிறுமி ஜெசிக்கா. SSJ4 நிகழ்ச்சியில் தன் காந்த குரலால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 2ஆம் இடத்தினை பிடித்தார். இறுதி சுற்றில் விடை கொடு எங்கள் நாடே என்ற பாடலை பாடி அனைவரையும் உருக வைத்ததோடு மிரம்மிக்க வைத்தது.
இரண்டாம் இடத்தை பிடித்து 1 கிலோ தங்கத்தை பெற்ற ஜெசிக்கா அந்த தங்கத்தை தமிழக மற்றும் ஈழத்தில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்திருந்தார் ஜெசிக்கா. இதன்பின் ஒருசில பாடல்கள் பாடி வந்த ஜெசிக்கா குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகிறார்.
பல நாடுகளுக்கு சென்று கச்சேரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஜெசிக்கா, ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். கிட்டத்தட்ட 24 வயதாகும் ஜெசிக்காவின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.



