சூப்பர் சிங்கரா? இனி வரமாட்டேன்னு சொன்ன பென்னி தயாளா இது! என்ன சார் இந்தபக்கம்

supersinger television bennydayal sridharsena
By Edward Mar 04, 2022 03:20 PM GMT
Report

சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதில் முக்கியமாக கருத்தபடும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். பல ஆண்டுகளாக பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது 8வது ஜூனியர் சீசனை ஒளிப்பரப்பு செய்து வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்களாக கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள்.

நிகழ்ச்சிக்கு முன்னணி பாடகர்கள் நடுவர்களாக இருந்து போட்டியாளர்களை வழி நடத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கர் 8 சீசனை முத்து சிற்பி, பரத், ஆன்ந்த் அபிலாஷ், மானஸி, ஸ்ரீதர் சேனா உள்ளிட்டவர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று ஸ்ரீதர் சேனா 10 லட்சத்தோடு டைட்டிலை கைப்பற்றினார்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நடுவராக இருந்த பென்னி தயாலுக்கும் ஸ்ரீதர் சேனாவிற்கு இடையில் சில மனக்கசப்பு விஷயங்கள் இருந்து வந்தது. இதுதொடர்பாக ஸ்ரீதர் சேனாவின் ஆதரவாளர்கள் பென்னியை கடுமையாக விமர்சித்து பேசி வந்தனர். இதனால் சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியை குறித்து தொடர்புடைய எந்த பதிவினையும் போடமாட்டேன். அடுத்த சீசனிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று சபதம் கொடுத்து அறிக்கையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் பென்னி மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்காவுடன் சேர்ந்து அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.

அதேபோல் கடந்த வாரம் ஒளிப்பரப்பாகிய நிகழ்ச்சிக்கும் பென்னி தயாள் வந்துள்ளார். அப்படி கூறிவிட்டு என்ன இந்த பக்கம் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.