சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10!! டைட்டில் வின்னர் காயத்ரிக்கு கிடைத்த பரிசு..

Kamal Haasan A R Rahman Super Singer Star Vijay Tamil Singers
By Edward May 26, 2025 02:35 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் தற்போது ஜுனியருக்கான 10வது சீசன் நடைபெற்று நிறைவடையவுள்ளது.

ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் போட்டியாளர்கள் பாடல்கள் பாடி வர தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில், ஆத்யா, சாரா ஸ்ருதி, நஸ்ரின், லைனட், காயத்ரி ஆகிய 5 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகி தற்போது கிராண்ட் ஃபினாலேவும் நடந்துள்ளது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வின்வெளி நாயகன் கமல ஹாசன், இயக்குநர் மணிரத்னம், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் வந்திருந்தனர்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10!! டைட்டில் வின்னர் காயத்ரிக்கு கிடைத்த பரிசு.. | Super Singer Junior 10 Tittle Winner Gayathri

சிறப்பாக பாடிய காயத்ரி டைட்டிலுடன் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அப்பார்ட்மெண்ட்-ஐ அள்ளியுள்ளார்.