சூப்பர் சிங்கர் பிரபலம் அய்யனாருக்கு திருமணம்.. ஜோடியாக வெளியிட்ட புகைப்படம் இதோ

Super Singer
By Kathick Aug 24, 2025 04:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் 10வது சீசன் பிரம்மாண்டமாக துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் இயக்குநர் மிஸ்கின் நடுவராக வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். ஏன், தமிழ் சினிமாவில் முன்னணி பாடகர்களாக கூட வந்துள்ளனர்.

அய்யனார்

அப்படி சூப்பர் சிங்கர் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த பாடகர்களில் ஒருவர் அய்யனார். ராப் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அய்யனாருக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

நிச்சயதார்த்த புகைப்படங்களை பாடகர் அய்யனார் தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..