கலாய்த்த மாகாபா ஆனந்த்!! குரேஷியால் சூப்பர் சிங்கரில் இருந்து கிளம்பிய கங்கை அமரன்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தில் ஆதரவை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா இருபரும் இணைந்து தங்களுக்கான தனிபாணியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது சூப்பர் சிங்கர் 9 சீசன் நிறைவு பகுதியை எட்டவுள்ளது. டாப் 5 பைனலிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக கங்கை அமரன் வருகை தந்துள்ளார்.
அப்போது மாகாபா எப்போது காமெடியாக சிலரை கலாய்ப்பது வழக்கம். அப்போது கங்கை அமரன் இசையமைத்த ஒரு பாடலை டிஜே போட்டுள்ளார். அதற்கு மாகாபா, உனக்கு மட்டும் சீரியல் பிஜிஎம் போடுறாங்க என்று கிண்டலடித்தார்.
உடனே கங்கை அமரன், கண்ணா நா ஏதோ கஷ்டப்பட்டு பாட்டுப்போட்ட அந்த பையன் BGM போடுறான்ன்னு கேட்டுள்ளார்.
உடனே குரேஷி, வந்தனம் சைதாப்பேட்டை நந்தனம்-னுக்கிட்டுன்னு கிண்டலடித்ததும், ஏய் என்று கங்கை அமரன் கோபப்பட்டு, நான் போறேன்பான்னு கிளம்பியுள்ளார். அதன் பிரமோ வீடியோ வைரலாகி வருகிறது.